தைவான் குறித்த கருத்தை திரும்பப் பெறுங்க... ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை!
தைவானைச் சார்ந்து ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி வெளியிட்ட கருத்து சீனாவின் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும் இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென சீனா எச்சரித்துள்ளது.
சீன வெளிநாட்டுத் துறை செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் பேசியதில், “தகாய்ச்சியின் கூற்றுகள் சர்வதேச சட்டத்தை மதிக்காதவை; சீன மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கருத்தை தாமதிக்காமல் திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் சீனா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுத்து விடும். அதன் விளைவுகளை ஜப்பானே சந்திக்க வேண்டி வரும்” எனக் கூறினார்.

இதற்கு பின்னணியாக, ஜப்பான் நாடாளுமன்றத்தில் நவம்பர் 7ஆம் தேதி பேசிய தகாய்ச்சி, “சீனா தைவானை தாக்கினால் ஜப்பானின் இருப்பே ஆபத்தாகும்; எனவே தைவானுடன் இணைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” என தெரிவித்துள்ளார். தைவானை தனது பிரிக்க முடியாத பகுதியாகக் கருதும் சீனா இந்தக் கருத்தை கடுமையாக கண்டித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
