ஜிப்பை கழற்றும் ஆண்களுக்கு பெண்களின் வலி புரியாது... எஸ்.வி.சேகரை கிழித்துத் தொங்கவிட்ட சின்மயி!
சமூக வலைதளங்களில் எப்போதும் அதிரடி கருத்துக்களைப் பதிவிடும் பாடகி சின்மயி, தற்போது நடிகர் எஸ்.வி.சேகரின் சர்ச்சை பேச்சுக்குத் தனது பாணியில் செருப்படி பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசிய எஸ்.வி.சேகர், ஆண்களின் ஆபாசச் செயல்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், 'மீ டூ' (Me Too) விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, எக்ஸ் (X) தளத்தில் எஸ்.வி.சேகரை கடுமையாகச் சாடியுள்ளார்.
Based on this clip - Mr S Ve Shekhar seems to ask why the Vilathikulam, Thoothukudi brutal rape and murder victim went behind shrubs in a forest area - the cops cant come there and shine a light everywhere.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 26, 2026
The girl reportedly went to relieve herself - something people without… https://t.co/teKLUjtusl
சின்மயி தனது பதிவில், "விரும்பிய இடத்தில் ஜிப்பை கழற்றித் திரியும் ஆண்களுக்குப் பெண்களின் வலி ஒருபோதும் புரியாது" எனச் சாட்டையடி கொடுத்துள்ளார். எஸ்.வி.சேகரின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் என்றும், இவரைப் போன்றவர்களின் மனநிலைதான் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சின்மயின் இந்த அதிரடிப் பதிவிற்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இணையதளங்களில் இந்த விவகாரம் 100 டிகிரி அனலில் பறந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சின்மயி, இப்போது எஸ்.வி.சேகரையும் வம்புக்கு இழுத்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.வி.சேகரின் பழைய சர்ச்சை கருத்துக்களையும் நெட்டிசன்கள் தற்போது தோண்டி எடுத்து விமர்சித்து வருகின்றனர். பெண்களின் ஆடை மற்றும் நடத்தை குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, ஆண்களின் வக்கிர புத்தியைத் திருத்தப் பாருங்கள் எனச் சின்மயி விடுத்துள்ள எச்சரிக்கை தற்போது வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
