'திரௌபதி 2' பாடலுக்காக மன்னிப்பு கேட்டார் சின்மயி... கோழைத்தனம் என போஸ்ட் போட்ட இயக்குநர் மோகன் ஜி!

 
சின்மயி திரெளபதி 2

இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருக்கும் 'திரௌபதி 2' திரைப்படத்தில் "எம்கோனே" என்ற பாடலைப் பாடியதற்காக, இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாடகி சின்மயி தனது தவறுக்காக உருக்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். படத்தின் பின்னணி குறித்தும், கொள்கைகள் குறித்தும் தனக்கு முன்பே தெரியாததே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கும் 'திரௌபதி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் "எம்கோனே" பாடல் இன்று மாலை 5.02 மணிக்கு வெளியானது. இந்தப் பாடலைத் தான் பாடகி சின்மயி பாடி இருந்தார். மோகன் ஜி-யின் படங்கள் சில சர்ச்சைக்குரிய அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால், சமூக நீதிக்காகப் பேசும் சின்மயி, அவரது படத்தில் பாடியது குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.


இணையத்தில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக, பாடகி சின்மயி இது தொடர்பாக விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்." "ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்குத் தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்தப் பாடலைப் பாட அழைத்த போது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் அங்கில்லை. இப்போது தான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. "முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த (படத்தின்) கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இது தான் முழு உண்மை" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மோகன் ஜி சின்மயி திரெளபதி 2

சின்மயின் இந்த விளக்கம், சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது கோழைத்தனம் என்று படத்தின் இயக்குநர் மோகன் ஜி போஸ்ட் போட்டிருக்கிறார். அதில், “என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறி வைத்து தாக்க வேண்டாம். திரௌபதி 2 படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்து தாக்குவது கோழைத்தனம் ஆகும்” என்று கூறி இருக்கிறார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!