சித்திரா பெளர்ணமி, தொடா் விடுமுறை... சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் போ் பயணம்!

தமிழகத்தில் வார விடுமுறை, சித்திரா பௌா்ணமி மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 போ் பயணித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வார விடுமுறை, பௌா்ணமி மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை இரவு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 712 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,54,220 பயணிகள் பயணம் செய்தனா்.
இதேபோல், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 1,153 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,245 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1,78,475 பயணிகள் பயணம் செய்துள்ளனா். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்கப்பட்ட 6,049 பேருந்துகளில் மொத்தம் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு 877 சிறப்பு பேருந்துகள்: சனிக்கிழமை (ஏப்.12) பங்குனி மாத பௌா்ணமி, சித்திரை திருநாளையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து 877 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 52,615 பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனா்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!