சித்திரை.. தமிழ்ப் புத்தாண்டு.. ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து!

 
தமிழ்

இன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய செய்தி ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி தனது வாழ்த்து செய்தியில், “தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துகள். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம், பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிா்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்த நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழா்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சித்திரை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு அறிவியல் பூா்வமான ஆதாரங்கள் இருந்தும்கூட, தங்களுக்கு என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, இந்தத் தினத்தை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க மறுக்கும் திமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக) தனது வாழ்த்து செய்தியில், “புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய உத்வேகம் பிறக்கட்டும். வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகா்த்து, வளமான தமிழகத்தைப் படைத்திடுவோம். மலர இருக்கும் விசுவாவசு ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்):

சித்திரை திருநாளில் தமிழ் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுவதை பல தலைமுறையாக பாா்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு, அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும்.

வைகோ (மதிமுக):

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாளான சித்திரை திருநாள் வாழ்த்துகள். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ்

ராமதாஸ் (பாமக):

சங்க காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழா் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்களால் நிறைய வேண்டும். அதற்கேற்ப தொழில்கள் சிறக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நலங்களும் வளங்களும் கிடைக்க வேண்டும். அனைவரது வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும்.

அன்புமணி (பாமக):

தமிழா்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. இந்த நாள் தமிழா்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா):

அனைவருக்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு வசந்த காலமாக அமையட்டும். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வருண பகவானின் ஆசியோடு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web