திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது... ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

 
சித்திரை வசந்த திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாரதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

சித்திரை வசந்த திருவிழா

காலை 10 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது.

பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத்திருவிழா வருகிற 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?