பூங்காவில் இருந்து சிவிங்கிப் புலி தப்பியோட்டம்.. அச்சத்தில் மக்கள் !!

 
சிவிங்கிப் புலி

இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. இதனையடுத்து இந்திய மண்ணில் சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக நமீபியாவில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.


அதோடு நிறுத்தாமல் இரண்டாவது கட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டது. இந்த 12 சிவிங்கி புலிகளும் அதே குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. இதில், நான்கரை வயது பெண் சிவங்கிப்புலி சாஷா சிறுநீரகக் கோளாறால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. அதேநேரம், சியாயா என்ற பெண் சிவிங்கி புலிக்கு 4 குட்டிகளை ஈன்றது.

சிவிங்கிப் புலி

இந்த நிலையில், சிவங்கிப்புலி ஒன்று  குனோ தேசிய பூங்காவில் இருந்து தப்பியோடியது. குனோ பூங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சிவங்கிப்புலி சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது. சிவங்கிப்புலியின் காலரில் கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு சாதனம் மூலம் அதை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web