தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

 
போலீசார்

தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதலே தமிழகத்தில் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பண்டிகையை கொண்டாட காவல் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு

சென்னையில் உள்ள 350 முக்கிய தேவாலயங்களை மையமாக வைத்து போலீசார் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாந்தோம், வேளாங்கண்ணி, அந்தோணியார், புனித ஜார்ஜ் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் கேமரா, சிசிடிவி மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க மாறுவேட போலீசாரும் நேற்றிரவு முழுவதும் ரோந்து சென்றனர். முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்தப்பட்டது. அதிவேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!