சிகரெட்டுக்கு ‘ஷாக்’… விலை 3 மடங்கு உயர வாய்ப்பு!

 
சிகரெட் நிரந்தர  தடைக்கு  புதுசட்டம்?! கலக்கத்தில் இளைஞர்கள்!!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மத்திய கலால் திருத்த மசோதா விரைவில் சட்டமாகும் நிலையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிகரெட், ஹூக்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 28% ஜிஎஸ்டிக்கு மேலாக கூடுதல் செஸ் மற்றும் கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகரெட்

மசோதா சட்டமானால் புகையிலைப் பொருட்களுக்கு 60% முதல் 70% வரை வரி உயர்த்தப்படும். இதனால் 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 முதல் அதிகபட்சமாக ரூ.11,000 வரை வரி உயர வாய்ப்பு உள்ளது. மெல்லும் புகையிலைக்கான வரி 25% இருந்து 100% ஆகவும், ஹூக்கா புகையிலைக்கான வரி 25% இருந்து 40% ஆகவும் உயர்த்தப்படலாம். பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கு விதிக்கப்படும் வரி 60% இருந்து 325% வரை அதிகரிக்கப்பட உள்ளது.

சிகரெட்

மொத்தத்தில் புகையிலைப் பொருட்களுக்கு 5 மடங்கு வரை வரி உயர்வு ஏற்படுவதால், சிகரெட் விலை 3 மடங்கு வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது. சிகரெட் நீளம் மற்றும் வகைக்கு ஏற்ப விலை மாறுபடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கத்தை கணிசமாகக் குறைக்கும் என சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!