சினிமாவெல்லாம் தோத்துடுச்சு... காதலிக்க சொல்லி போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய காங்கிரஸ் பெண் பிரமுகர்!

 
காங்கிரஸ் காதலி

பெங்களூருவில் பெண் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவருக்குத் தொடர்ச்சியாகக் காதல் தொல்லை கொடுத்ததுடன், ரத்தத்தால் கடிதம் எழுதி மிரட்டிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் சதீஸ். அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான சஞ்சனா (என்ற வனஜா, 38) என்பவருடன் இவருக்குச் சமீபத்தில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் விபரீதமாக மாறியுள்ளது. சஞ்சனா திடீரென இன்ஸ்பெக்டர் சதீஸைத் தொடர்புகொண்டு, தான் அவரைக் காதலிப்பதாகக் கூறித் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

காதல்

ஆரம்பத்தில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், சஞ்சனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இன்ஸ்பெக்டர் அவரது அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கியவுடன், சுமார் 11 வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து அழைத்துத் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கே பூச்செண்டுகளை அனுப்பியதுடன், வாட்ஸ்-அப் மூலம் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அனுப்பித் தனது அரசியல் செல்வாக்கைக் காட்டி மிரட்டியும் உள்ளார். "எனக்கு பெரிய இடத்து செல்வாக்கு இருக்கிறது, அதனால் என்னை நீ காதலித்துதான் ஆக வேண்டும்" என அவர் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்தத் தொல்லைகளின் உச்சகட்டமாக, சஞ்சனா நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் சதீஸைச் சந்தித்துள்ளார். அப்போது, தனது ரத்தத்தால் எழுதிய காதல் கடிதம் ஒன்றை அவரிடம் நீட்டிய சஞ்சனா, "தன்னை காதலிக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்" என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சதீஸ், தனது பணிக்குப் பாதுகாப்பு கோரியும், மிரட்டல் விடுத்த பெண் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சஞ்சனாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இன்ஸ்பெக்டர் சதீஸ், "சஞ்சனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, தற்போது கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றுத் தனியாக வசித்து வருகிறார். எனக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அப்படி இருந்தும் அவர் ஏன் எனக்கு இப்படி ஒரு விசித்திரமான தொல்லை கொடுத்தார் என்பது புரியவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு காவல் அதிகாரிக்கே பெண் பிரமுகர் காதல் வலை வீசிய சம்பவம் கர்நாடக அரசியலிலும் காவல்துறையிலும் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!