சினிமா மக்கள் தொடர்பாளர் கடையம் ராஜூ காலமானார்... பிரபலங்கள் இரங்கல்...!

 
கடையம் ராஜு

மக்கள் தொடர்பாளர் கடையம் ராஜு காலமானார். இவர் சிவாஜி காலம் முதலே தமது திரைவாழ்க்கையை தொடங்கியவர். நடிகர்கள் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் காலம் முதல்  சினிமாவில் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்தவர்.  தென்காசியை பூர்வீகமாக கொண்ட   இவர் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர்.

கடையம் ராஜு


1000க்கும் மேற்பட்ட சினிமா கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர்.  அத்துடன் சில காலம்  எம்.பி. திருநாவுக்கரசருக்கு மேனேஜராக பணிபுரிந்தார். இவர்  உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 7மணிக்கு சிகிச்சை பலனின்றி  காலமானார். இவரது மறைவு திரைப்பிரபலங்கள்  மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

rip

இன்று காலை 11 மணிக்கு அவரது இல்லத்திற்கு  கொண்டுவரப்பட்ட அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web