பிரபல பாடகர் மீண்டும் ‘புது மாப்பிள்ளை’ ஆனார் ... ரகசியமாக 2வது திருமணம்!
இந்தியாவின் டாப் ராப் பாடகரான பாட்ஷா ( நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த பஞ்சாபி நடிகை ஈஷா ரிககியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ஜாஸ்மினைப் பிரிந்த பாட்ஷாவுக்கு, தற்போது இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாட்ஷாவின் 'தாதீரி' பாடல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த 'ஹாட்' செய்தி பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது. ஈஷா ரிககியின் தாயார் பூனம் ரிககி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புதுமணத் தம்பதியின் புகைப்படங்களைப் பகிர்ந்து "கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் பாட்ஷா பாரம்பரிய செர்வானி மற்றும் தலைப்பாகையுடனும், ஈஷா சிவப்பு நிறப் பட்டுடை மற்றும் நகைகளுடனும் ஜொலிக்கின்றனர்.

நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, இதுவரை தங்களது உறவு குறித்துப் பகிரங்கமாக அறிவிக்காமல் 'மெயின்டைன்' செய்து வந்தது. பாட்ஷா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரவில்லை என்றாலும், மாமியாரே புகைப்படங்களை வெளியிட்டு 'சீல்' குத்திவிட்டதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
