தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகம்.. போதைக்கு அடிமையாகும் தமிழக இ்ளைஞர்கள்!

 
டெய்ஸி பாஜக சிறுபான்மை

பா.ஜ., கட்சியின் சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மாநில சிறுபான்மை அணி  தலைவர் டெய்சி, செய்தியாளர்களிடம் பேசும் போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், பா.ஜ., கட்சியும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற பரப்புரையை, தமிழகத்தில் வலுவாக செய்து வருகின்றனர்.  தி.மு.க.,வின் பொய்யான பரப்புரையை உடைத்து, மலர்ச்சியுடன் சிறுபான்மை அணியினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தினர் அதை புரிந்து கொண்டு வருகின்றனர். சிறுபான்மையின மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் போதை பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. போதைக் கலாச்சாரத்தில் மூழ்கிய தமிழக இளைஞர்கள் உழைக்காமல், வட இந்தியர்கள், தமிழகத்தில் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். தமிழர்களின் நிலை, முயல், ஆமை கதையாக மாறி வருகிறது. அதனால், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, புயல் வேக நடவடிக்கையால், போதை கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

டெய்ஸி பாஜக சிறுபான்மை

இஸ்லாமியர்களுக்குள் பெரிய வன்முறைகள் நிகழ்கின்றன. அதை தவிர்க்க, இந்த அணி சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதிகமான தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். தமிழர்கள், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தொழில் செய்ய வேண்டுமென்றால், இந்தி கற்றுக் கொள்வது அவசியம் என்றார்.

டெய்ஸி பாஜக சிறுபான்மை

மேலும், தி.மு.க., ஊடகங்கள் தான், பா.ஜ. கட்சியை பாலியல் சீண்டல் கட்சியாக சித்தரித்து வருகிறது. பா.ஜ.க தான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி. ஒழுக்கத்தை கற்று பட்டை திட்டிய வைரமாக மாறுவதற்கு, ஒவ்வொரு தமிழனும், ஆர்.எஸ்.எஸ்., பயிற்சிக்கு செல்ல வேண்டும். தேசப் பணியில் ஈடுபடும் பிரதமர் மோடியை, ஊடகங்கள் ரவுண்ட் கட்டி, கிண்டல் செய்வது நல்லதல்ல என்று தெரிவித்தார்.

பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று அரசியல் கட்சிகளை விடுங்கள்... ஆனால், யோசித்து பார்த்தால், சமீபமாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து இருப்பது நிஜம் தானே? முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த குற்ற செயல்கள், குடி போதையில் என தினந்தோறும் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ஏதேவொரு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்காரங்கள், வெட்டு குத்து, கொலை, கொள்ளை என்று வருகிற குற்றசெயல்களுக்கு பின்னால், மது போதை என்கிற வார்த்தைகளும் சேர்ந்தே வருகிறது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் பெரும்பகுதி போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை இந்த அரசு வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web