‘குடி’மகன்கள் அதிர்ச்சி... 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் தொடர் விடுமுறை!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

தமிழகத்தைப் போலவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாவட்டங்களிலும் மதுபான விற்பனையில் பெரும் வருவாயை அந்தந்த மாநில அரசுகள் ஈட்டி வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 25ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து வகையான மதுபான கடைகள்,  பார்களையும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில்  சட்ட மேலவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

மதுபானக் கடை

இதனை முன்னிட்டு  சைபராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் உள்ள கொல்லூர் மற்றும் ஆர்.சி.புரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில் உள்ள பார்கள் உள்பட உணவகங்களுடன் இணைக்கப்பட்ட ஒயின், கள்ளுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என  சைபராபாத் காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மதுபானக் கடை

அதன்படி பிப்ரவரி 25ம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை  தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web