பாமகவில் உச்சகட்ட மோதல்: "அன்புமணி அடிப்படை உறுப்பினரே கிடையாது!" - ஜி.கே.மணி ஆவேசப் பேட்டி!

 
ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகக் கட்சி தற்போது இரண்டாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அன்புமணியைப் பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், அந்தப் பதவியைத் தாமே ஏற்றுக்கொண்டதோடு, தனது மகள் காந்திமதியைச் செயல் தலைவராக அறிவித்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த அன்புமணி, தாமே தலைவர் என அறிவித்துத் தனியாக அலுவலகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். இன்று காலை அன்புமணி தரப்பு வெளியிட்ட அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பென்னாகரம் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக" அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலடி கொடுத்து ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னை நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாமக-வில் அன்புமணி இப்போது ஒரு அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி என்னைத் தூக்க முடியும்?"  "பாமக என்றால் அது மருத்துவர் ஐயா (ராமதாஸ்) தான். 25 ஆண்டுகள் நான் கட்சித் தலைவராக இருந்திருக்கிறேன். அன்புமணியைக் கட்சிக்குள் கொண்டு வந்ததே நான்தான். ஆனால் அவருக்கு இப்படி ஒரு சிந்தனை வருமா?"

 ராமதாஸும், அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும்...  பிரச்னைகளை பார்த்து  கண்ணீர் வடித்தேன்... பாமக ஜி.கே.மணி வேதனை!

"அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் ஏற்கெனவே நீக்கி விட்டார். எல்லா அதிகாரமும் ராமதாஸிடமே உள்ளது. எனவே, அன்புமணியின் அறிவிப்பு செல்லாது." ராமதாஸின் ஆதரவாளர்கள் திலகர் திடல் மற்றும் தைலாபுரம் தோட்டத்திலும், அன்புமணியின் ஆதரவாளர்கள் பனையூரிலும் திரண்டுள்ளதால் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. ஜி.கே.மணியின் இந்தப் பேட்டி அன்புமணி தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக ஜி.கே.மணி

தமிழக அரசியலில் நீண்ட காலமாகக் குடும்பக் கட்சியாகப் பார்க்கப்பட்ட பாமக-வில், தற்போது தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!