நடுக்கடலில் வெடிகுண்டு வீசி மீனவர்கள் மோதல்.. தொடரும் பதற்றம்!

 
மீனவர்கள்

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட கடற்பகுதிகளில் அண்மைக் காலங்களாக மீனவர்கள் இடையே மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. மீனவர்கள் பயன்படுத்தும் வலை, எல்லை தாண்டி மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு உருவாகிறது.சில நேரங்களில் இது பெரும் வன்முறையாகவும் வெடித்துவிடுகிறது. 

அந்தவகையில் கடலில் படகில் சென்று நாட்டு வெடிகுண்டு வீசி மோதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கடல் பகுதியில் இருந்து சுமார் இரண்டரை நாட்டிகல் தொலைவில் நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க சாதாரண வலைகளை விரித்து வைத்திருந்தனர். 

மீனவர்கள்

கடந்த 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த சமாதானராஜ் தலைமையில் விசைப்படகு மீனவர்கள் 12 பேர், 5 விசைப்படகுகளில் விதிமுறைகளை மீறி வந்து மீன் பிடித்தனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமானது. வலைகள் கிழிந்து மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்ததாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இந்த தகவல் அப்பகுதி மீனவ கிராமத்தில் பரவியது. இதனையடுத்து இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்கள் 37 பேர் 12 படகுகளில் கடலுக்கு சென்று விசைப்படகு மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

மீனவர்கள்

இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினரிடமும், கடலோர காவல் படையினரிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து கூடங்குளம் கடலோர காவல் படை போலீசார். நாட்டு படகு மீனவர்கள் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல் இடிந்தகரை மீனவர்களும், கன்னியாகுமரி மீனவர்கள் மீது புகார் மனு அளித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web