இன்று வங்கதேசத்துடன் மோதல்.... ஆறுதல் வெற்றி பெறுமா பாகிஸ்தான்?!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தான், ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், வங்கதேசம்  கிரிக்கெட் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இன்று ஆறுதல் வெற்றியைப் பெறுமா பாகிஸ்தான் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் வங்கதேசம் அணி தோல்வி கண்டிருந்தது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும், 2வது ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டிருந்தது. 

இந்தியா பாகிஸ்தான்

தொடர்ச்சியாக 3வது முறையாக பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி கடந்த 2024ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையிலும் லீக் சுற்றுடன் நடையை கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

29 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐசிசி தொடர் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல் திறன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் வீரர்கள், அணி கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான்

இந்நிலையில் பாகிஸ்தான் அணி இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த தொடரில் இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இதனால் சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் பாகிஸ்தான் அணி ஆர்வம் காட்டக்கூடம். இருப்பினும் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியப்படும். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் எந்தவித ஆக்ரோஷமும் வெளிப்படாமல் உள்ளது. 35 ஓவர்களுக்கு பிறகே தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதற்கு முயற்சி செய்வது அணியின் ஸ்திரத்தன்மையை வெகுவாக பாதித்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் தேர்விலும் பாகிஸ்தான் அணியில் தடுமாற்றம் நிலவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் எந்தவித போராட்ட குணமும் வெளிப்படாதது அணியின் ஒட்டுமொத்த திறமை குறித்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web