பள்ளி மாணவர்களுக்குள் மோதல்... மாணவனின் காது துண்டானது!

 
அடிதடி
பள்ளி மாணவர்கள் விடுதியில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சக மாணவர்கள் தாக்கியதில் ஒரு மாணவரின் காது த் துண்டான சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியின் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  

அடிதடி

10ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் ஒரு 12 ம் வகுப்பு மாணவனின் காது கிழிந்து ரத்தம் வந்தது.சிறிது நேரத்தில்  அந்த மாணவனுக்கு காது துண்டான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  
தற்போது மாணவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவத்தை பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் மறைக்கும் முயன்றது.

சண்டை

இதனால்  தன்னுடைய மகனுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?