மார்ச் 14ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் விநியோகம்!

 
தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 14ம் தேதி முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவிவு பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.

தேர்வு

இந்நிலையில் தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவ மாணவியருக்கான ஹால் டிக்கெட்டுகள் மார்ச் 14ம் தேதி முதல் விநியோகம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலமும் பெறலாம். தனித் தேர்வர்கள் மற்றும் நேரில் பெற முடியாதவர்கள் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 14ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web