10ம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவடைந்தது... மே 19ல் முடிவுகள் வெளியீடு!

கடந்த மாதம் 28ம் தேதி 10ம் வகுப்புக்கான பொதுத்தோ்வு தொடங்கிய நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளனா்.
நேற்று இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடந்து முடிந்துள்ளது. தொடா்ந்து மாணவா்களின் விடைத்தாள்கள் நாளை ஏப்ரல் 17ம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
ஏப்.21ம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியா்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனா். அதனைத் தொடா்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் ஏப்ரல் 22ம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!