விபத்தில் சிக்கி 10ம் வகுப்பு மாணவன் பலி... 10 பேருக்கு உறுப்பு தானமளித்து உயிர் கொடுத்த நெகிழ்ச்சி!

 
சாரங்க்

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் விடுமுறையை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில்  அனைத்து பாடங்களிலும் A+ தேர்ச்சி சதவீதம் பெற்ற நிலையில் மாணவன் உயிர் பிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கேரளா மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர்  பினீஷ்குமார் - ரஜினி தம்பதி. இவர்களுடைய  மகன் சாரங். இவர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சாரங்க், அவரது தாயுடன் மே 6ம் தேதி ஆட்டோவில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார்.  

உறுப்பு தானம்

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலையில் உயிரிழந்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் சாரங் உயிரிழந்ததை அடுத்து  சாரங்கின் உடல் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. சாரங்கின் சடலத்திற்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.  10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சாரங்க், அனைத்துப் பாடத்திலும் ஏ பிளஸ் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உறுப்பு தானம்
தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்னதாகவே சாரங்க் உயிரிழந்து விட்டார் என உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி துடித்த காட்சி காண்பவர்களை வேதனையில் கரைய வைத்தது.  சாரங்கின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.சாரங்கின் கண்கள், கல்லீரல் மற்றும் இதய மஜ்ஜை  என  10 பேருக்கு தானம் செய்ய சாரங்கின் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

கோட்டயத்தைச் சேர்ந்த குழந்தைக்காக சாரங்கின் இதயம் வழங்கப்பட்டது. இது போன்று பத்து பேருக்கு புது வாழ்வு அளித்து சாரங்க் உயிரிழந்தது காண்பவர்களை நெகிழச் செய்தது.  கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே சரியாகி வந்ததும் கால்பந்து பூட்ஸ் வாங்க விரும்புவதாக கூறியிருந்தார். மகன் இறந்த பெரும் சோகத்திலும் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பத்து பேருக்கு வாழ்வளித்த பெற்றோர்களின் மனித நேயம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web