ஜல்லிக்கட்டு காளை தாக்கியதில் 10 ம் வகுப்பு மாணவர் பலி... கதறித் துடித்த பெற்றோர்!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் சவேரியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் இசையாஸ். இவரது மனைவி மேரி கிரேஸி. இவர்களுக்கு மூன்று மகன்கள். இவரது மூத்த மகன் திரண்பெணடிக்ட் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த திரண்பெணடிக்ட் வல்லம் அருகில் அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திரண்பெணடிக்ட் நெஞ்சில் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் திரண் பெணடிக்ட்டை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் திரண்பெணடிக்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாணவரின் பெற்றோர் வல்லம் போலீசில் அளித்துள்ள புகாரில், ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் மாட்டை அடக்கினால் ரூ.250 பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதனால் என் மகன் மாட்டின் அருகே சென்றுள்ளார். இதில் மாடு முட்டியதில் என் மகன் இறந்து விட்டார். எனவே, மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் "அற்புதாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்றபோது மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார். என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மேலும் அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" என மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!