10வது படித்தவர்களுக்கு மாதம் ₹69,100 வரை சம்பளம்... மத்திய பாதுகாப்புப் படையில் மெகா வேலைவாய்ப்பு!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பாதுகாப்புப் படைகளில் உள்ள கான்ஸ்டபிள் (General Duty) மற்றும் ரைபிள்மேன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசுப் பணிகளைப் பெறலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள்:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம், 2025 ஆம் ஆண்டுக்கான மத்தியப் பாதுகாப்புப் படைகளில் (CAPF) ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 25,487 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எந்தெந்தப் படைகளில் எவ்வளவு காலியிடங்கள்?
இந்த மெகா வேலைவாய்ப்பில் இடம்பெறும் முக்கியப் படைகள் மற்றும் காலிப் பணியிடங்களின் விவரங்கள்:
தொழில் பாதுகாப்புப் படை (CISF): 14,595 இடங்கள் (ஆண்கள்: 13,135, பெண்கள்: 1,460)
எல்லை பாதுகாப்புப் படை (BSF): 6,161 இடங்கள்
மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF): 5,490 இடங்கள்
சாஸ்திர சீமா பால் (SSB): 1,764 இடங்கள்
இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP): 1,293 இடங்கள்
அசாம் ரைபிள்ஸ் (AR): 1,706 இடங்கள்
செயலக பாதுகாப்புப் படை (SSF): 23 இடங்கள்
(குறிப்பு: ஆண்களுக்கான மொத்த காலியிடங்கள் 23,080, பெண்களுக்கான மொத்த காலியிடங்கள் 2,407)

அடிப்படைத் தகுதிகள்
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (2026 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் கல்வித்தகுதியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்).
வயது வரம்பு: 01.01.2026 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (அதாவது, விண்ணப்பதாரர்கள் 02.01.2003 தேதிக்கு முன்னரும், 01.01.2008 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.) அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் உண்டு.
சம்பள விவரம் மேற்கண்ட பணிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வுகள்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசித் தேதி: விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 1ம் தேதி கடைசி நாள்.

தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.
உடல் திறன் தேர்வு (Physical Efficiency Test).
உடல் தரநிலை தேர்வு (Physical Standard Test).
மருத்துவச் சோதனை.
ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி பெறுபவர்கள் மட்டுமே இறுதித் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.
தேர்வு மையங்கள் (தமிழகம்)
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
