டியூசன் சென்ற 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... அதிர்ச்சியளித்த ஆசிரியர்!

 
டியூசன் பாலியல்

தமிழகத்தில் சமீப காலங்களாக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் பெருகி வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் டியூசன் வகுப்புக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(56). திருவாரூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பள்ளி முடித்து மாலை நேரங்களில் அந்த பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இவரது டியூசன் வகுப்பில் அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது