இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்... வழிகாட்டி நெறிமுறைகள்.. புகார் எண்கள் அறிவிப்பு!
இன்று தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்புக்காக பறக்கும் படை மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறும் போது வினாத்தாளில் பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தாலோ, அது குறித்து உடனடியாகப் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய புகார் எண்கள்: 9498383075, 9498383076. மின்னஞ்சல்: dgequestionpaperqueries@gmail.com. இந்த உதவி எண்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள் தொடர்பான தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.

தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான மின்விசிறி, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை போன்ற வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க அறிவிப்புப் பலகைகள் பள்ளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
