பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற 12ம் வகுப்பு காதலன்.. கேரளாவில் பயங்கரம்!
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள வாணியம்பலம் பகுதியில் நடைபெற்ற சம்பவம், பள்ளி மாணவர்களிடையே நிலவும் தவறான போக்கு மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி, கடந்த ஜனவரி 15ம் தேதி பள்ளிக்குச் சென்றவர், அதன் பின்னர் அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர், தங்களது மகள் காணாமல் போனதாக நிலம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஒருவனுடன் அந்தச் சிறுமி காதலில் இருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த மாணவனைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த மாணவன் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை ஒப்புக் கொண்டான். "காதலை முறித்துக் கொள்ளலாம்" என்று சிறுமி கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், பள்ளி முடிந்ததும் சிறுமியை வாணியம்பலம் ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்துச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அவன், பின்னர் சிறுமியின் கைகளைக் கட்டி, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை அங்கேயே வீசிவிட்டுச் சென்றுள்ளான்.
மாணவன் அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளி சீருடையிலேயே கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர். சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
