தந்தை உயிரிழந்த சோகத்தில் காலையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி !

 
ரித்திகா

இன்று தமிழகம் முழுவதும் மாநிலவழி கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன .  அதன்படி  விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்களிலும் என 105 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகிறது. 

தேர்வு

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில்10,665 மாணவர்களும்11171 மாணவிகளும் என 21836 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.  தேர்வினை கண்காணிக்க , பறக்கும் படைகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3500 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

தேர்வு


விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து  தேர்வு எழுதும் ரித்திகாவின் தந்தை பிரபாகரன் நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் துக்கத்தை மனசில் புதைத்து இன்று ரித்திகா  அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதினார். இந்நிலையில் நூர்ஜகான் என்கிற மாணவியின் தந்தை ஜான்பாட்ஷாவும், முகையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி மகிமை அரசின் தாய் அமலமேரி நேற்று உயிரிழந்த நிலையில் இன்று 12ம் வகுப்பு தேர்வு எழுதினர்.இத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் 2ம் ஆண்டில் 579 மாணவ/மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர்.  20 இதில் பார்வைத்திறனற்ற மாணவ/ மணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web