பேருந்து சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு... வந்த பள்ளிப் பேருந்தே ஏற்றிய கொடூரம்!
கர்நாடக மாநிலம் பீதரில், பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய போது ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய 3-ஆம் வகுப்பு மாணவி ருத்வி (8) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீதரில் உள்ள குருநானக் பள்ளியில் 3-ஆம் வகுப்புப் படித்து வந்த ருத்வி, நேற்று மாலை வழக்கம்போல் பள்ளிப் பேருந்தில் வீட்டிற்குத் திரும்பினாள். சிறுமி, தனது வீட்டின் அருகே பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சிறுமி முழுவதுமாக இறங்கியதைக் கவனிக்காமல் பேருந்தை வேகமாக இயக்கினார். இதனால் நிலைதடுமாறிய ருத்வி கீழே விழுந்து, பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கினாள்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சிறுமியை அப்பகுதி மக்களும் பெற்றோரும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ருத்வி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பீதர் போலீசார், அஜாக்கிரதையாகப் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
