துப்பாக்கியைக் காட்டி தலைமையாசிரியரை மிரட்டிய 9ம் வகுப்பு மாணவன்... ஒடிசாவில் பயங்கரம்!

 
துப்பாக்கி

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 9-ஆம் வகுப்புப் படித்து வரும் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறைக்குள் கைத்துப்பாக்கியுடன் வந்து தலைமை ஆசிரியரையே சுட்டுக் கொல்வதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி

கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த 14 வயது மாணவன் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், வகுப்பறையில் இடையூறு செய்து வந்தான் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்தச் சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்துச் சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், திடீரெனத் தனதுப் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை வெளியே எடுத்து, "சுட்டு விடுவேன்" என்று தலைமை ஆசிரியரையே மிரட்டியிருக்கிறான்.

துப்பாக்கி

சிறுவனின் செயலைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் அடைந்த ஆசிரியர்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து ஒடிசா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவனைப் பிடித்து, அவனது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். போலீசார், மாணவன் வைத்திருந்த கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 14 வயதுச் சிறுவனுக்கு இந்தத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!