இன்று முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடக்கம்! உற்சாகத்துடன் கிளம்பிய மாணவர்கள்!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின. இதனை அடுத்து உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கினர். தமிழகம்முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.tngasa.in  த்தில்  மே 8ம் தேதி   முதல் மே மாதம்  22ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

இது தவிர கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.   மொத்தம் உள்ள  164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   1,07, 299 இடங்களில் சேர 2,46, 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு  மே 29ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும்,  ஜூன் 12 முதல் ஜூன் 30ம் தேதி வரை   2 கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது. இதில் 36,626 மாணவர்களும்,  48,273 மாணவிகளும் என மொத்தம்  84,899 மாணவ மாணவியர் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொறியியல் கல்லூரி

இதில்  அரசுப் பள்ளிகளில் படித்து புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 23,295 மாணவிகள் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்களுக்கு இன்று ஜூலை 3ம் தேதி திங்கட்கிழமை முதல்  முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 4ம் தேதி முதல் மீண்டும் இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி  நாளை  ஜூலை 4ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் , ஜூலை 5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், ஜூலை 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web