விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறைகள்!
தேசிய, மாநில அளவிலான விளையாட்டு, கலைத் திருவிழா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் புதிய நடைமுறை தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் பயிலும் வகுப்பறைகள், அந்த மாணவர்களின் பெயரால் அழைக்கப்படும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் சர்மி கஸ்தூரி, முத்துச்செல்வி ஆகிய மாணவிகள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர். அவர்களை பாராட்டும் வகையில், அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை அந்த வகுப்பறைக்கு வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவிகளுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மூலம் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிப்பதோடு, பிற மாணவர்களையும் ஊக்குவிப்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தால், அருகிலுள்ள வகுப்பறைகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் அந்த வகுப்பறைகள் மாணவர்களின் பெயராலேயே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
