சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் மூடல்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் போக்குவரத்து மாற்றம்.. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை!

 
புத்தாண்டு

2026 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று (டிசம்பர் 31) இரவு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இன்று இரவு நீங்கள் வெளியே செல்லத் திட்டமிட்டிருந்தால், பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவும்:

போர் நினைவிடம் (War Memorial) முதல் கலங்கரை விளக்கம் (Light House) வரை இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும். கடற்கரை உட்புறச் சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் அனுமதி இல்லை. சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.

புத்தாண்டு

அடையாறில் இருந்து வருபவர்கள்: கிரீன்வேஸ் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, மந்தைவெளி, லஸ் மற்றும் மயிலாப்பூர் வழியாகச் செல்லலாம். ஆர்.கே. சாலையில் இருந்து வருபவர்கள்: வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, சாந்தோம் சாலை வழியாக கிரீன்வேஸ் சாலையை அடையலாம். பாரிஸ் சந்திப்பில் இருந்து வருபவர்கள்: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, முத்துசாமி பாலம் வழியாக அண்ணா சாலையை அடையலாம். வாலாஜா சாலை: வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

தெற்கு கால்வாய் சாலை: கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான சாலையில் வாகனப் போக்குவரத்து கிடையாது. இரவு 8 மணி முதல் போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது. கிரீன்வேஸில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஆர்.கே. மடம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.

புத்தாண்டு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளைத் தவிர்க்கவும், மெரினா கடற்கரைக்கு வரும் மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!