மேக வெடிப்பு... பெருவெள்ளம்... சிம்லாவில் கார்கள் அடித்துச் செல்லப்பட்ட துயரம்.. வைரலாகும் வீடியோ!
நேற்று மாலை சிம்லாவில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. சிம்லாவின் ராம்பூர் பகுதியில் நள்ளிரவில் மேகவெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜகட்கனாவில் வாகனங்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
हिमाचल के शिमला में बादल फटने से तबाही.. मलबे में ताश के पत्ते की तरह बही गाड़ियां#CloudBurst #Rampur #Shimla #flood #HimachalPradesh #WeatherUpdate pic.twitter.com/8O8T5TPexw
— Shivam Sharma (@imshivamsharmaa) May 25, 2025
சிம்லாவில் நேற்று மாலை 6 மணியளவில் பக்கல்ட் இஞ்கட்கனா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில், மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயரமான பகுதிகளில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி வெள்ளம் சீறிப்பாய்ந்துள்ளது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

உள்ளூர் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சுற்றுலா பயணிகள், இயல்பு நிலை திரும்பும் வரை குடியிருப்பில் இருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
