குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி... அரசு மரியாதையுடன் தகனம் செய்ய அறிவிப்பு!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். குமரி அனந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் குமரி அனந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி அனந்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தந்தையை இழந்து வாடும் தமிழிசைக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதையடுத்து, குமரி அனந்தன் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!