'அப்பா' செயலியை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழா இன்று நடைபெற்று வருகிறது.இந்நிகழ்வு 7வது மண்டல மாநாடாக நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து முதல்வர் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அப்பா என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட்டார். மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய செயலியாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’ஒன்றிய அரசு நம்மைப் பாராட்டினாலும் நிதி தர மறுக்கிறது. ஒரு நிலத்தை கைப்பற்ற நினைத்தால், அதன் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி மொழியை, அழிக்க வேண்டும் என்பார்கள். அது தமிழகத்தின் கொடிய வரலாறாக மாறிவிடக் கூடாது என போராடிக்கொண்டு இருக்கிறோம்.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1,488 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அந்த மொழியைப் பேசுபவர்கள் சில ஆயிரம் பேர்தான். இந்தி பேசும் மாநிலங்களில் சுமார் 25 மொழிகள் அழிந்துள்ளன. தமிழ்நாடு, தன் தாய்மொழியான தமிழைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறது’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!