சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் போதைப்பொருள் வழக்கில் கைது!
கடந்த 2021-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) போலீசாரால் ஓஜி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் சரிபுதீனுடன் சேர்ந்து சீனிவாசன், சரத் ஆகிய 3 பேரையும் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்துகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பார்ட்டிகளில் சினிமா பிரபலங்கள் மற்றும் மாடலிங் துறையில் உள்ளவர்கள் பங்கேற்றாரா என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்ட காரில் ரூ.27 லட்சம் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் பணம் ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் தொடர்புடையதாகவும், சர்புதீன் அதைச் சொன்னார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
