பொதுமக்களுக்கு கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்... ரூ.2.85 கோடி மதிப்பில் ‘முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்!
சென்னை கொளத்தூரில் இன்று காலை கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம் பெற்ற முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூரில் உள்ள ஜெகன்நாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் 'முதல்வர் படைப்பகம்' என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த படைப்பகத்தில், நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தில் படிப்பதற்கு ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் என 3 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். இந்நிலையில் இந்த முதல்வர் படைப்பகத்தை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!