பெரும் சோகம்... சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் விபத்து… 16 பேர் பலி!

 
நிலக்கரி சுரங்கம்
 

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரங்கத்தினுள் இன்னும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் அவசர மீட்புப் பணிகளை முன்னெடுத்து, சிக்கியவர்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

மேகாலயாவில் சட்டவிரோதச் சுரங்கங்களை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து நடப்பு ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கத்தின் உரிமையாளர் மற்றும் நடத்துபவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!