நிலக்கரி சுரங்க வெடி விபத்து… 16 பேர் உயிரிழப்பு… !
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம் தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிகழ்ந்த இந்த விபத்தில் இதுவரை 16 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்பதால் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
இந்த விபத்து குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் தகவல் வெளியிட்டுள்ளார். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களை காரணமாக காட்டி, மேகாலயாவில் ‘எலி வளை’ எனப்படும் சட்டவிரோத நிலக்கரி சுரங்க முறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது. இருந்தும் இந்த வகை சுரங்கங்கள் சில இடங்களில் தொடர்வதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
