நிலக்கரி புகை மூச்சுத்திணறல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
தர்ன் தரண் மாவட்டம் அலிபூர் கிராமத்தில், அர்ஷ்தீப் சிங் (21) மற்றும் அவரது மனைவி ஜஷந்தீப் கௌர் (20) மற்றும் அவர்களுடைய ஒன்றரை மாதக் குழந்தை சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். குளிரைத் தவிர்க்கும் நோக்கில் அறையில் நிலக்கரி அடுப்பை எரித்த நிலையில், புகை வெளியேறும் வழி இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.

அதே அறையில் இருந்த 10 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. நிலக்கரி புகை அதிகமாக சுவாசிப்பதால் மூச்சுத்திணறி குடும்பத்தின் மூன்று பேர் பலியானிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்ன் தரண் மாவட்டம் ஹரிகே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
