காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு - அச்சத்தில் கோவை விவசாயிகள்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்திற்குச் சென்ற கூலி தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி என்கிற ராஜன். இவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரை ஒரு காட்டு யானை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
யானைத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாரிசாமி உடனடியாக மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, இன்று (டிசம்பர் 13) அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சிறுமுகை பகுதியில் உள்ள பொதுமக்களுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க, வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, வனப்பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அகழியை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
