"இளம்பெண் பலாத்காரத்திற்கு முன்பு கொலை செய்தோம்” - கோவை பாலியல் குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் | ஒரே நாளில் அரங்கேறிய 2 கோர சம்பவங்கள்!

 
கோவை கூட்டு பலாத்காரம்

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும், பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் ஓர் ஆட்டிறைச்சி வியாபாரியைக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு கோர சம்பவங்களை அரங்கேற்றிய இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ் (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (28) மற்றும் இவர்களது உறவினர் தவசி என்ற குணா ஆகியோர் இந்தக் குற்றவாளிகள் ஆவர். கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகில் காரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை இருட்டான பகுதிக்குக் கடத்திச் சென்று, மூன்று பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது மாணவியின் காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட இந்த மூவரையும், நவம்பர் 3ஆம் தேதி துடியலூர் அருகே வெள்ளக்கணறு பகுதியில் தப்பி ஓட முயன்றபோது, தனிப்படைப் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது மூவரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை கூட்டு பலாத்காரம்

முன்னதாக நடந்த கொலைச் சம்பவம்

சிறையில் அடைக்கப்பட்ட இந்தக் குற்றவாளிகளை, கடந்த மாதம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோதுதான், இவர்கள் மற்றொரு கொலையிலும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதூரைச் சேர்ந்த தேவராஜ் (வயது 55) என்பவர் பலியாகியுள்ளார். இவர் ஆட்டு வியாபாரம் செய்து வந்தவர். நவம்பர் 2ஆம் தேதி காலையில், இந்தக் குற்றவாளிகள் மூவரும் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் அமர்ந்து நீண்ட நேரம் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தேவராஜ், அவர்களைப் பார்த்து, "ஏன் இங்கு இவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மூவரும் தேவராஜை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோவை

சம்பவங்களின் இணைப்பு
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அங்கிருந்து இரவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்த இந்தக் கும்பல், இருட்டான பகுதியில் மீண்டும் மது அருந்தியுள்ளது. அப்போது தான் அங்கு இருட்டான இடத்தில் காரை நிறுத்திக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் பார்த்து, பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைச் செய்ய முயற்சித்துள்ளனர்.

அதாவது நவம்பர் 2ம் தேதி காலையில் தேவராஜைக் கொலை செய்து விட்டு, அதே நாள் இரவு மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலையடுத்து சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த தேவராஜ் கொலை வழக்கில், இந்தக் குற்றவாளிகள் மூவரையும் கோவில்பாளையம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காக, சிறையில் உள்ள மூவரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, கோவை மாவட்டக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.

ஒரே நாளில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களை இந்தக் கும்பல் அரங்கேற்றியிருப்பது கோவையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!