கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை விமான நிலையம் அருகே நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, கைதான 3 பேர் மீதும் சட்ட நடவடிக்கை இறுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது டிஎன்ஏ (DNA) சோதனை முடிவுகள், தடயவியல் சான்றுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, விசாரணையின் முக்கியத்துவம் கருதி இப்போது மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கைதான சதீஷ், காளீஸ்வரன் மற்றும் குணா ஆகிய மூவர் மீதும் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பான விசாரணை மதுரையில் நடைபெற்று வருவதால், அவர்கள் நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
