கோவை மாணவி கூட்டு பலாத்காரம்... 3 பேரும் குற்றவாளிகள் ... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
கோவை கோவை

கோவை மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி, அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒரு மாதத்துக்குள் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 72 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பை வாசித்து, மூவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். தண்டனை உள்ளிட்ட முழு தீர்ப்பு விவரங்கள் அனைத்தும்  மாலை அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.  தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!