கோவை மாணவி கூட்டுபலாத்காரம்: 200 பக்க குற்றப்பத்திரிகையில் 'பக்கா' ஆதாரங்கள்... இன்று பூர்வாங்க விசாரணை தொடக்கம்!

 
கோவை கூட்டு பலாத்காரம்

கடந்த நவம்பர் 2ம் தேதி கோவை விமான நிலையம் அருகே நடந்த இந்த கொடூர சம்பவத்தில், காவல்துறையினர் ஏற்கனவே 50 பக்க முதற்கட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை, குற்றவாளிகளுக்குத் தப்பிக்க வழியில்லாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டிஎன்ஏ சோதனை முடிவுகள், கைரேகைப் பதிவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் உடைகள் மூலம் சேகரிக்கப்பட்ட தடயங்கள் குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன. 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின் தொகுப்பு மற்றும் குற்றவாளிகளின் செல்போன் சிக்னல்கள் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்ததை ஆணித்தரமாக மெய்ப்பிக்கின்றன.

பலாத்காரம் கூட்டு பாலியல் சிறுமி பாலியல்

கைதான சதீஷ், காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் குற்றப் பின்னணி குறித்த முழு விவரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததும், மாணவியின் ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கியதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை

இன்று கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில், தாக்கல் செய்யப்பட்ட இந்த கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைச் சரிபார்க்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. குற்றவாளிகள் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால், அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரக் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. வழக்கின் அடுத்த கட்ட முக்கிய விசாரணை வரும் ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!