சரிந்து விழுந்த மருத்துவ கல்லூரி விடுதி ... சென்னையில் பரபரப்பு!
சென்னையில் பாரிமுனையில் பிராட்வே பேருந்து நிலையம் எதிரே உள்ள 60 ஆண்டுகள் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி கட்டடம் ஒன்று இருந்து வந்தது. இந்நிலையில் இன்று திடீரென இடிந்து விழுந்தது.342 அறைகள் கொண்ட இந்த விடுதியை 1959ல் காமராஜர் திறந்து வைத்தார். இந்த விடுதியில் 430 பேர் தங்கும் வகையில் இடவசதி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு 4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, செயல்படாத கட்டடமாக இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், இடிபாடுகள் எதிரே உள்ள நாராயணப்ப தெருவில் சிதறி விழுந்தன. பிராட்வே பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததால் அவ்வழியாக சென்ற 3 பேருக்கு (விஸ்வநாதன், சொக்கலிங்கம், சுப்பிரமணியன்) படுகாயம் ஏற்பட்டது.
தி.நகர் சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சொக்கலிங்கம் என்பவருக்கு இடது காலிலும் , விஸ்வநாதனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட சேகர் பாபு , இடிபாடுகளை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!