அதிர்ச்சி!! இடிந்து விழுந்த கடைகள்!! மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய போது சோகம்!!

 
சரிந்து விழுந்த கடைகள்

மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், கட்டிடத்தின் கீழ் இருந்த மண் சரிந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக அந்த பகுதியை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மரங்கள் வேரோடு சாய்கின்றன.

சரிந்து விழுந்த கடைகள்

நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்  பல பகுதிகள் மழைக்காலங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து கொள்கிறது. இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு தனி குழு அமைத்து மழை நீரை தேங்காமல் இருக்க திட்டம் வகுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வட சென்னை பகுதிகளில்  திரு வி க நகர் தொகுதிக்குட்பட்ட , பட்டாளம் கே எம் கார்டன் பகுதியில்,   கால்பந்து மைதானம் அமைக்கும் பணி,    உடற்பயிற்சி கூடம் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணி மற்றும்   பல்நோக்கு மையம் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. 

சரிந்து விழுந்த கடைகள்
இதே போல தென் சென்னை பகுதியிலும் மழை நீர் வடிகால் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோவில்  அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது.  இதற்காக கட்டிடத்தின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.   இதனால் கட்டிடத்தின் திறத்தன்மை குறைந்து வணிக கடைகளில் முன்புறம் இடிந்து விழுந்துள்ளது.  அதிர்ஷ்டவசமாக  பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web