உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்.. டோல்கேட்டில் லாரிகள் முற்றுகை!
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரிகளை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை - தூத்துக்குடி சாலையில் எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு இன்னும் தங்களுக்கு வரவில்லை என்று கூறி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வழக்கம் போல கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் அரி ராகவன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் செல்லும் அவசர வழியில் அனைத்து வாகனங்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
