கலெக்டர் வாகனம் விபத்து… 4 பேர் படுகாயம்... பெரும் பரபரப்பு!
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது. கொன்னி அருகே நடந்த இந்த சம்பவத்தில், எதிர்திசையில் வேகமாக வந்த கார் கலெக்டர் வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த உடனே உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விபத்து குறித்து கலெக்டர் கூறுகையில், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாக தெரிவித்தார். தவறான திசையில் வந்த கார் விபத்துக்கு காரணம் என்றும் கூறினார். இந்த சம்பவத்தில் நால்வருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
