கல்லூரி பேருந்து கோர விபத்து... 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். மொத்தம் 39 கல்லூரி மாணவ, மாணவிகளும் 3 ஆசிரியர்களும் என 42 பேர் நேற்று இரவு மூணாறுக்கு சுற்றுலா சென்றனர்.
பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்த பிறகு இன்று மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பும் வழியில் மூணாறு மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் என்ற இடத்தில் வளைவு பகுதியில் சுற்றுலா வாகனம் திரும்பும் பொழுது நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 மாணவர்கள் கவின் மற்றும் சுதன் ஆகியோர் ஆபத்தான நிலையில் இருந்தனர். இவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இரண்டு மாணவிகளும் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!